அதிபர் கோத்தபய பதவி விலகக் கோரி வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் போராட்டம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள் போராட்டம்
வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள் போராட்டம்
Updated on
1 min read

பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் பல்வேறு நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்துவிட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மக்கள் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்து வரும் சூழலில், 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”கோத்தபய ராஜபக்சே பதவி விலக்க வேண்டும்” என்ற பதாகைகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் முக்கிய பல்கலைக்கழகங்களிலும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவற்றில் சில வீடியோ தொகுப்பு:

- Sri Lanka Tweet

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in