கரோனா புதிய திரிபு எக்ஸ்இ; வேகமாக பரவும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனா: பிரதிநிதித்துவப் படம்
கரோனா: பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

லண்டன்: கரோனா புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா கடந்த 2 ஆண்டுகளாக பல அலைகளைாக பரவியது. அண்மையில் கரோனா உருமாறிய ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கி அச்சுறுத்தியது.

இது கரோனா பரவல் 3-வது அலையாக தொடங்கியது. கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வந்தது. இதனை அடுத்து உலகின் பல நாடுகளும் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தின. நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் மீண்டும் தொடங்கின. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து மார்ச் இறுதியில் பெருமளவு குறைந்தது.

இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனம் கரோனா புதிய திரிபான எக்ஸ்இ குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கரோனா திரிபு கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் 600க்கும் குறைவான பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் வேறு எந்த நாட்டிலும் இந்த புதிய வகை கரோனா கண்டறியப்படவில்லை.

இப்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கோவிட்-19 இன் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in