Published : 02 Apr 2022 02:59 PM
Last Updated : 02 Apr 2022 02:59 PM

மெக்கா - மதினாவில் 2 வருடங்களுக்குப் பிறகு ரமலான் சடங்குகளுக்கு அனுமதி

கோப்புப் படம்

ரியாத்: கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா - மதினாவில் ரமலான் சடங்குகள் நடத்தப்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை சுமார் 18 மாதம் நீடித்தது. இந்த நிலையில் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தப் பிறகு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு ஹஜ் பயணிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் இம்முறை ரமலானை முன்னிட்டு வரும் பயணிகளுக்கு வுதி அரசு எந்தக் கட்டுபாட்டையும் விதிக்கவில்லை.

மேலும் மெக்கா - மதினாவில் ரமலான் சடங்குகள் (மசூதியில் தங்குவது, உணவளிப்பது) நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதிவாழ் லாய்லா நகாடி கூறும்போது, “ரமலானை முன்னிட்டு பத்து நாட்கள் மெக்காவில் தங்கி வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விரைவில் நான் விண்ணபிக்க இருக்கிறேன்” என்றார்.

ரமலானை முன்னிட்டு மெக்காவில் வழிபாடு செய்பவர்களுக்கு சேவை செய்வதற்காக மெக்கா பெரிய மசூதியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள், கூட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுதி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x