Published : 27 Mar 2022 12:53 PM
Last Updated : 27 Mar 2022 12:53 PM

'இதை நான் சொல்லியே ஆகவேண்டும்...' - பைடன் மீது உக்ரைன் எம்.பி. காட்டமான விமர்சனம்

உக்ரைன் எம்.பி. இன்னா சாவ்சன்

கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் போலந்து நகருக்கு வந்தபோது உக்ரேனியர்களுக்கு மேற்கிலிருந்து இன்னும் அதிக உதவிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் எதுவும் பேசவில்லை என் உக்ரைன் பெண் எம்.பி. இன்னா சாவ்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதிபர் ஜோ பைடன் அண்மையில் போலந்து உக்ரைன் எல்லையில் உள்ள நகரத்திற்குச் சென்றார். அங்கே அவர் உக்ரைன் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இது குறித்து உக்ரைன் நாடாளுமன்றத்தின் பெண் எம்.பி.யான இன்னா சாவ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காட்டமாக இருந்தாலும் இதை நான்சொல்லியே ஆக வேண்டும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேச்சில் இரு வார்த்தை கூட உக்ரேனியர்களான நாங்கள் மேற்கத்திய நாடுகள் இன்னும் அதிகமாக எங்களுக்கு உதவும் என்று நம்பிக்கை கொள்வதாக இல்லை. போலந்து பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் குண்டுகள் வார்சாவில் அல்ல கார்கிவ்விலும், கீவிலும் வெடித்துக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக போலந்து எல்லையில் உக்ரைன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், நேட்டோ தலைவர்களை சந்தித்துப் பேசிய அதிபர் ஜோ பைடன், நேட்டோ எல்லையில் இருந்து ஒரே ஒரு அங்குலத்தைக் கூட அசைத்துப் பார்க்க முடியுமென்று நினைக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.
அந்தப் பேச்சு தங்களுக்கு எவ்வித வாக்குறுதியையும், நம்பிக்கையையும் அளிப்பதாகத் தெரியவில்லை என்றே உக்ரைன் எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.

உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். மேற்கிலிருந்து இன்னும் ஆயுத, நிதி உதவி அதிகமாக வேண்டுமென்று அவர் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x