மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறந்துவிட்டேன்: ஹிலாரி கிளிண்டன் பேட்டி

மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறந்துவிட்டேன்: ஹிலாரி கிளிண்டன் பேட்டி
Updated on
1 min read

பில் கிளிண்டன்- மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறந்துவிட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி கிளாரி கிளிண்டன் 2016-ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஐனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 66 வயதாகும் அவர் “பீப்பிள் மேகசின்” என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

பில் கிளிண்டன்- மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறக்க விரும்புகிறேன். அந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. “வேனிட்டி பேர்” இதழில் அண்மையில் வெளியான லெவின்ஸ்கியின் பேட்டியைப் படிக்கவில்லை.

எப்போதுமே நாம் எதிர்காலத்தை குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்.

நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை இப்போதே கூறமுடியாது. இன்றைய வாழ்க்கையை அனுபவிக்கிறேன். எனது மகள் செல்ஷியா தாயாகப் போகிறார். நான் பாட்டியாகப் போகிறேன். அதனால் வழக்கத்தைவிட கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது, உலக நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனது எதிர்காலப் பணி என்ன என்பது குறித்தும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in