

இராக் எல்லையின் ஒரு பகுதியான கயீமை, சன்னி இஸ்லாமிய தீவிரவாதிகள் கைப்பறியுள்ளனர். இராக் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேரை ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகள் கொன்றனர்.
கடந்த ஒரு வாரமாக இராக்கில், ஐஎஸ்ஐஎல் தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் எண்ணெய் வளம் மிக்க நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இந்த நிலையில் இன்று இராக்கின் கயீம் எல்லைப் பகுதியை தீவிரவாதிகள் தற்போது கைப்பற்றியுள்ளனர். அங்கு நடத்தப்படும் தாக்குதல் அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிகின் அரசுக்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்களை விரிவுப்படுத்தி வரும் இந்த இயக்கத்தின் அடுத்த இலக்கானது தலைநகர் பாக்தாத் என பெயர் குறிப்பிடதாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இராக் மற்றும் லெவான்ட் இஸ்லாமிய தேசிய இயக்கம் நேற்று முதல் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கிருந்த இராக் துருப்புகளை வீழ்த்தப்பட்டுள்ளது. தற்போது கயீம் நகரிலிருந்து 320 கீ.மி முன்னேறி பாக்தாத் நோக்கி விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராக்கில் ஷியா பிரிவினரையும் உள்ளடக்கிய நடுநிலையான அரசு அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஷியா பிரிவினரின் முக்கிய தலைவரான அயோத்துல்லா அல் சிஸ்தானி வலியுறுத்தியுள்ளார்.
இராக்கில் நிலவும் போர் சூழலை தடுக்க, அமெரிக்கப் படைகளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் இராக் கோரியிருந்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ஒபாமா, இராக்கில் தற்போது நடந்துவரும் பிரச்சினையை ராஜீய ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.