பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சீக்கியருக்கு விருது வழங்க முஸ்லிம் அமைப்பு கோரிக்கை

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சீக்கியருக்கு விருது வழங்க முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தானில் கடந்த சில தினங் களுக்கு முன்பு தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சீக்கியருக்கு அந் நாட்டு உயரிய விருது வழங்க வேண்டும் என்று ஒரு முக்கிய முஸ்லிம் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கைபர் பக்துன்கவா மாகாண முதல்வரின் சிறப்பு உதவியாளராக (சிறுபான்மையினர் நலன்) இருந்த சர்தார் சோரன் சிங் (58), புனர் மாவட்டம், பிர்பாபா பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

தம்கா-ஐ-இம்தியாஸ் விருது

பாகிஸ்தான் உலமா கவுன் சில் சார்பில், சோரன் சிங் குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடை பெற்றது. அப்போது இந்த கவுன் சிலின் தலைவர் ஹபிஸ் தாஹிர் அஷ்ரபி கூறும்போது, “சோரன் சிங் படுகொலை கண்டிக்கத்தக்கது. நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அவர் கடுமையாக போராடினார். இந்த நாட்டுக்காக தனது குடும்பத்தையே துறந்தார். எனவே, சோரன் சிங்குக்கு தம்கா-ஐ-இம்தியாஸ் விருதை அரசு வழங்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தானில் சிறப்பாக சேவை செய்பவர்களுக்கு வழங் கப்படும் உயரிய விருது களில் 4-வது இடத்தில் உள்ளது இந்த விருது.

மருத்துவரான சோரன் சிங், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார். ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியில் 9 ஆண்டுகள் பணி யாற்றிய இவர், கடந்த 2011-ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சியில் சேர்ந்தார். மேலும் தெசில் கவுன்சில், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டி உள்ளிட்ட அமைப்புகளில் உறுப் பினராகவும் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in