

ஐஎஸ் அமைப்பு உலகின் குடிமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கும் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்பு தரைவழியாகவும், ஆன்லைன் வழியாகவும் செயல்பட முடிவதே அதன் அபாயத்தன்மையை அதிகரித்துள்ளது என்கிறார் சூசன் ரைஸ்.
“உண்மையில் ஐ.எஸ். அமைப்பு பயங்கரவாத அமைப்பாகவும், கிளர்ச்சியமைப்பாகவும் செயலபடும் கலவையான ஒரு அமைப்பாகும். சிரியாவின் குழப்பங்களைப் பயன்படுத்தி இரண்டு நாடுகளின் மிகப்பெரிய பரப்பை தன் வசம் பிடித்து வைத்துள்ளது ஐஎஸ்.
நாட்டின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவது என்பது அதற்கு நிதி மற்றும் மனித ஆதாரங்களை அளிக்கவல்லது. இதுதான் அவர்கள் தங்களை காலிபேட் என்று தவறாக உரிமை கோர தாங்கு சுவராக உள்ளது. இதுதான் அவர்களை பின் தொடர்பவர்களுக்கு தனித்தன்மையான ஒரு முறையீடை முன்வைக்கிறது. இதே வேளையில் சமூக வலைத்தளங்களின் முழு வீச்சையும் பயன்படுத்தி போர் வீரர்களை தேர்வு செய்ய வைக்கிறது மற்றும் சிறு செல்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்த ஐ.எஸ்.க்கு உத்வேகம் அளிக்கிறது.
இவர்களது கொடுங்கோல் ஆட்சியில் உலகின் குடிமக்களுக்கு கடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பு மிகவும் அபாயகரமான ஒரு பயங்கரவாத அமைப்பு, அது ஜனநாயகத்தின் அடிப்படைகளை மத்திய கிழக்கில் தகர்த்து வருகிறது. உலகிலுள்ள அனைவருக்கும் ஐஎஸ் மிகப்பெரிய அபாயமாகும்.
அதிபர் பராக் ஒபாமா அழுத்தம் கொடுத்தது போல், ஐஎஸ் அமைப்பு நமது நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை, இதை விடவும் மிகக்கொடூரமான மனித விரோதிகளை நாம் தோற்கடித்துள்ளோம். ஐஎஸ்ஐஎல் ஒன்றும் நாஜி ஜெர்மனி கிடையாது. பனிப்போரின் உச்சக்கட்டத்தில் இருந்த சோவியத் யூனியனும் அல்ல ஐஎஸ். இது 3-ம் உலகப்போரும் அல்ல, அனைவரும் ஊதிப்பெருக்குவது போல் நாகரிகங்களுக்கு இடையிலான போரும் அல்ல.
மாறாக நாம் நம் முஸ்லிம் நண்பர்களையும், நட்புநாடுகளையும் அன்னியப்படுத்துகிறோம். உலகின் ஒரு பெரிய மதத்தின் ஒற்றை பிரதிநிதியாக ஐஎஸ் அமைப்பை ஒரு சிலர் தவறாகவும், மனம்போன போக்கிலும் வரிப்பதன் மூலம் ஐஎஸ். கொடூரங்களினால் உயிரிழந்த முஸ்லிம்களுக்கு நாம் மரியாதை குறைவை ஏற்படுத்துகிறோம்.
பரவாலாக பேசினோமானால் ஐஎஸ் அமைப்பை தகர்ப்பதற்கு 4 முக்கிய பரிமாணங்கள், உத்திகள் உள்ளது. சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய இலக்குகள் மீது நாம் ஓய்வு ஒழிச்சலில்லாமல் தாக்குதல் நடத்தி வருகிறோம். ஐஎஸ் கிளைகளை, கிளை அமைப்புகளை அழித்து வருகிறோம். அதன் உலக வலைப்பின்னலை கடுமையாக சிதைப்பதில் ஈடுபட்டு வருகிறோம். நம் தாய்நாட்டைக் காக்க 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறோம். இது ஒரு சிக்கல் நிறைந்த முயற்சி.
இதனை சில வாரங்களிலோ, மாதங்களிலோ ஏன் சில ஆண்டுகளிலோ கூட பூர்த்தி செய்து விட முடியாது. ஆனால் நாட்பட நாட்பட, ஒவ்வொரு மைலாக, ஒவ்வொரு அடிமேல் அடியாக நாம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறோம்.
வாஜிரிஸ்தான் பகுதியிலிருந்து அல்கய்தாவை பாகிஸ்தான் ராணுவம் விரட்டி அடித்து வரும் வேளையில், இஸ்லாமிக் ஸ்டேட அமைப்பின் பெருகும் செல்வாக்கையும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது நடவடிக்கை மூலம் அங்கிருந்து ஆப்கானுக்கு பயங்கரவாதிகள் செல்ல விடாமல் தடுத்து வருகிறது” என்ற் கூறியுள்ளார் சூசன் ரைஸ்.