ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அந்தரங்க தகவல் கசியும் ஆபத்து

ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அந்தரங்க தகவல் கசியும் ஆபத்து
Updated on
1 min read

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பயனாளர் களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைனில் தனிநபரின் அந் தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விவாதம் காரசாரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பயனாளரின் பெயர், சுய விவரங்கள் இல்லாமலேயே அவர் யார் என்பதை எளிதில் கண்டறிந்து விட முடியும் என்று அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக கணினித் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒருவரின் இருப்பிடத்தை குறிப் பிட்டு தகவல்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. இவ்வாறு இருப் பிடத்துடன் பதிவுகளை வெளியிடும் போது அந்த நபர் யார், அவரின் வயது, பாலினம், இனம், குடும்ப வருமானம், என அனைத்து தகவல் களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இவை மட்டுமன்றி அவர் எங்கெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கு கிறார் என்பதைக்கூட கண்டுபிடித்து விட முடியும்’ என்று கொலம்பியா பல்கலை. வல்லுநர்கள் உறுதிபட கூறுகின்றனர்.

இதற்காக பல்கலை. நிபுணர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி யுள்ளனர். அதன் அடிப்படையில் ஒரு நபர், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைத் தளங்களில் தகவல்கள், புகைப் படங்களை பதிவு செய்யும் நேரம், இருப்பிடம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அவரின் அந்தரங்க தகவல்களை அச்சுபிசகாமல் கூறுகின்றனர். அந்த நபரின் கிரெடிட் கார்டு பயன்பாட்டை அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்டறிகின்றனர்.

கூகுள் நிறுவன உதவியுடன் ஆய்வு நடத்திய கொலம்பிய பல்கலை. வல்லுநர்கள் இந்த அதிர்ச்சி தகவல்களை வெளி யிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in