வாட்ஸ்அப்பில் இனி தகவல்களை திருட முடியாது: புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பில் இனி தகவல்களை திருட முடியாது: புதிய வசதி அறிமுகம்
Updated on
1 min read

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப் படத்தை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துக் பார்க்கவோ முடியாத வகையில் மறையாக்கம் (என்க்ரிப்ஷன்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வாட்ஸ் அப் குழு எண்ணிக்கை வரம்பு 100-ல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் பயனாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில் முதல்முறையாக மறை யாக்கம் எனப்படும் என்க்ரிப்ஷன் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படம் என எதுவாக இருந்தாலும் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க் கவோ முடியாது. புதிய வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத் துவோர் இனிமேல் கவலையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

வாட்ஸ் அப்பில் மறையாக் கம் வசதி அறிமுகம் செய்யப்பட்டி ருப்பது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடு களை கவலையடையச் செய்துள் ளது. இது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியபோது மறையாக்கம் வசதி யால் தீவிரவாதிகளால் இனிமேல் தகவல்களை திருட முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in