

ஏதென்ஸ் துறைமுகம் அருகே ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியுள்ளதையடுத்து அவர்கள் தாங்களாகவே ராணுவம் கட்டிய முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என்று கிரீஸ் நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
2 வாரங்களுக்குள் அகதிகள் ராணுவம் கட்டிய ஒழுங்குமுறை முகாம்களுக்குச் சென்று விடுவது நல்லது இல்லையெனில் வலுக்கட்டாயமாக முகாம்களுக்கு கொண்டு செல்ல நேரிடும் என்று அந்நாட்டு அரசு அகதிகளை எச்சரித்துள்ளது.
மொத்தம் 52,000 அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஐரோப்பிய எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து கிரீஸ் எல்லைப்பகுதியில் பைரேயஸ் துறைமுகப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்களை வடக்கு கிரீஸில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட முகாம்களுக்குச் செல்ல கிரீஸ் அதிகாரிகள் அங்குள்ள வசதிகளை மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் எடுத்துக் கூறி வலியுறுத்தி வருகின்றனர்.
பைரேயஸ் துறைமுகம் சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்க்கும் இடமென்பதால், அங்கு அகதிகள் முகாமிட்டிருப்பது சரியல்ல என்று கிரீஸ் அரசு கருதுகிறது.