Published : 20 Feb 2022 07:25 AM
Last Updated : 20 Feb 2022 07:25 AM

ரஷ்யா - பெலாரஸ் இணைந்து கூட்டு போர் பயிற்சி; உக்ரைன் அருகே தயார் நிலையில் ரஷ்ய போர் விமானங்கள்: புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

கீவ்/புதுடெல்லி

உக்ரைன் எல்லையில் படையைக் குறைத்துள்ளதாக ரஷ்யா கூறிய நிலையில், அந்நாட்டு போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பெலாரஸுடன் இணைந்து கூட்டுபோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ரஷ்யாவின் பக்கத்து நாடானஉக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லையில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை மக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, உக்ரைன் எல்லையில் படையைக் குறைத்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், மேலும் சில செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்சார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் ரஷ்யாவின் ராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.

2 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

இதனிடையே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் நகரின் வடபகுதி ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நேற்று வெடிசத்தம் கேட்டதாக தகவல்வெளியாகி உள்ளது. பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர் என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இது ரஷ்ய ராணுவ ஊடுருவலுக்கு வித்திடலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே, உக்ரைன் எல்லையில் உள்ள மற்றொரு நாடான பெலாரஸுடன் இணைந்துரஷ்ய ராணுவம் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டதாக ரஷ்யஅதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இது அதிபர் விளாடிமிர் புதின்மற்றும் பெலாரஸ் அதிபர் கண்காணிப்பில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியின்போது, கின்சால் மற்றும் சிர்கான் அதிநவீன ஏவுகணைகள் கடல் மற்றும் நில எல்லையை குறிவைத்து ஏவியதாகவும் அணு ஆயுதங்களை சோதனை செய்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான கட்டணம் 2 மடங்கு..

உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால் அங்குள்ள இந்தி யர்கள் நாடு திரும்ப வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், உக்ரைனின் கீவ் - டெல்லி இடையிலான விமான கட்டணம் (ஒருவழி) ரூ.26 ஆயி ரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக டெல் லியைச் சேர்ந்த சுற்றுலா முகவர்அனில் கல்சி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x