

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கில் நிதி திரட்டி வருகின்றனர்.
ஆளும் ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிளாரி கிளிண்டனுக்கும், சென்ட்டர் பெர்னி சாண்டர்ஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் பெர்னி சாண்டர்ஸ் கடந்த மார்ச் மாதம் மிக அதிகபட்சமாக ரூ.322 கோடி நிதி திரட்டியுள்ளார். ஹிலாரி கிளிண்டன் கடந்த மார்ச்சில் ரூ.203 கோடியை நன்கொடையாக வசூல் செய்துள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலும் சொந்தமாகவே செலவு செய்கிறார். அவர் கடந்த மார்ச் மாதம் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.140 கோடியை ஒதுக்கியுள்ளார். அந்த கட்சியின் மற்றொரு வேட்பாளர் டெட் குரூஸ் சுமார் 80 கோடி அளவுக்கு நிதி திரட்டியுள்ளார்.