தலிபான்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க வீரர் நாடு திரும்பினார்

தலிபான்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க வீரர் நாடு திரும்பினார்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டு களுக்குப் பிறகு தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க வீரர் வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். வியட்நாம் போருக்குப் பிறகு நீண்டகாலம் தீவிரவாதிகள் பிடியிலிருந்த அமெரிக்க வீரர் என்ற பெயர் பெறுகிறார் இவர்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறுகையில், "எங்களது ராணுவ வீரர் செர்ஜன்ட் பவ் பெர்க்தல் (28), ஜெர்மனியின் ராம்ஸ்டீன் விமானப்படை தளத்தி லிருந்து ராணுவ விமானம் மூலம் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோவில் உள்ள ராணுவ தளத்தை வந்தடைந்தார். அவர் உடனடியாக இங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதி களுக்கு எதிரான போரில் பங்கேற் றிருந்த பெர்க்தல் தலிபான்களால் கடத்தப்பட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்நிலையில், 5 தலிபான் கைதிகளை விடுவித்ததையடுத்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 31-ம் தேதி பெர்க்தலை தலிபான்கள் விடுவித்தனர்.

இதற்கிடையே, பெர்க்தலை மீட்பதற்காக தலிபான் தீவிரவாதி கள் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கட்சி யான குடியரசு கட்சி கண்டித் துள்ளது. தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து பெர்க்தல் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in