

இராக்கில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், நஜாஃப் மாகாணத்தில் இந்திய கட்டடத் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும் அவர்களின் பாஸ்போர்ட்களை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் திருப்பித்தர மறுப்பதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி இண்டெர் நேஷனல்’ கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராக்கில் மோதல் வலுத்துவரும் நிலையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணி புரிந்து வருகிறார்கள். கடந்த 5 மாதங் களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப் படவில்லை என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் தாங் கள் பணிபுரியும் நிறுவனங்களின் வளாகத் திற்கு வெளியே செல்வதில்லை. அவர்கள் இந்தியாவிலுள்ள தங்கள் குடும்பத் துடன் மீண்டும் சேர்ந்தால் போதும் என்று கூறுகின்றனர்.
பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டவாறு தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை கடந்த 19-ம் தேதி அன்றே அனுப்பிவிட்டுக் காத்திருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை எங்கள் அமைப்பினரால் தொடர்புகொள்ள இயலவில்லை.
திக்ரித் நகரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவ மனையில் இந்திய செவிலியர்கள் 46 பேர் உள்ளனர். மொசுல் நகரில் இந்தி யத் தொழிலாளர்கள் 40 பேரை கிளர்ச்சி யாளர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டப்படி, இரு படைகள் இடையே மோதல் நடை பெறும்போது, பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடாது. மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து அவர் கள் பத்திரமாக வெளியேறிச் செல்ல உதவவேண்டும்.
எனவே கிளர்ச்சிப் படையினரும் குர்திஷ் பகுதி அரசும் அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவ வேண்டும். இவ்வாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.