Last Updated : 07 Apr, 2016 10:13 AM

 

Published : 07 Apr 2016 10:13 AM
Last Updated : 07 Apr 2016 10:13 AM

அகதிகளாக ஊடுருவும் ஐஎஸ் தீவிரவாதிகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரன்டெக்ஸ் அமைப்பு தகவல்

ஐஎஸ் தீவிரவாதிகள், அகதிகள் போல வேடமிட்டு எளிதில் எல்லை யைக் கடந்து ஐரோப்பாவுக்குள் ஊடுருவுகிறார்கள். இதனை, ஐரோப்பிய ஒன்றிய எல்லை முகமை ஒப்புக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்ள எல்லை விவகாரங்களைக் கையாள்வதற்காக பிரன்டெக்ஸ் அமைப்பு 2004-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் வெளி யிடப்பட்டுள்ள ‘ரிஸ்க் அனலை சிஸ் 2016’ அறிக்கையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கிரீஸ், இத்தாலியிலிருந்து ஏராளமான அகதிகள் வருகின்ற னர். அவர்களில் போலி ஆவணங் களைக் காட்டி, உரிய பரிசோ தனைகள், அபராதங்களை எதிர் கொள்ளாமல் எளிதில் உள்ளே நுழைந்துவிடுகின்றனர். எல்லைப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் பெருந்தவறு காரணமாக இது நடந்துவிடுகிறது.

லெராஸ் வழியாக முறை கேடாக இரு தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர். தாக்குதல் களில் தொடர்புடைய அவர்கள் கிரேக்க அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், போலியான சிரிய ஆவணங் களைக் காட்டி, பதிவுகளை வேக மாக முடித்துக் கொண்டனர்.

ஏராளமான அகதிகள் போலி யான அல்லது அடையாள ஆவணங்கள் இல்லாமல் வருவது கவலை அளிக்கிறது. இவ்வாறு வருபவர்கள் முழுமையான பரி சோதனை அல்லது தண்டனைக்கு உட்படாமல் தப்பிவிடுகின்றனர். அதுபோன்றவர்களால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பாதுகாப்பு அச் சுறுத்தல் ஏற்படுகிறது. இச்சூழ் நிலையை அவர்கள் நன்கு பயன் படுத்திக்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் 18 லட்சம் பேர் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்துள்ளனர். இதை இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களின் திட்டத் துக்குச் சாதகமாக பயன்படுத் திக் கொள்கின்றனர். சிரியாவி லுள்ள ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் களும் வீடு திரும்புவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x