வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி

வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி
Updated on
1 min read

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார்.

வில்லோ என்ற இரண்டு வயதான கிரே கலர் நிற பூனை ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.

இப்பூனை குறித்து ஜோ பைடனின் மனைவி ஜெல்லி பைடன், கூறும்போது, ”ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள வில்லோ க்ரோவ் என்ற என்ற பெயர் பூனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வில்லோ என்றேன் அழைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பைடன் செல்லமாக வளர்த்த நாய், கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றைட டிசம்பர் மாதம் ஜோ பைடன் சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in