

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட் பாளர்கள் போட்டியில் உள்ள டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் ஆகியோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் பரபரப்பாக நடந்து வரு கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் அமோக ஆதர வுடன் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த தேர்தலில் இருவருக்கும் பின்னடைவு ஏற் பட்டுள்ளது.
குடியரசு கட்சியின் மற்றொரு அதிபர் வேட்பாளர் டெட் குரூஸ் மற்றும் ஜனநாயக கட்சியின் மற்றொரு வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் முறையே ட்ரம்ப் மற்றும் ஹிலாரியை விட விஸ்காஸ்சின் மாகாணத்தில் அதிக ஆதரவு பெற்றுள்ளனர்.
இங்கு நடைபெற்ற தேர்தலில் டெட் குருஸுக்கு 48 சதவீத வாக்கு களும், ட்ரம்ப்புக்கு 34 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அதே போல் ஜனநாயக கட்சியின் சாண்டர்ஸுக்கு 56 சதவீத வாக்கு களும், ஹிலாரிக்கு 43 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் விஸ்கான்சின் மாகாணத் தில் ட்ரம்ப், ஹிலாரிக்கு பின் னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் இருவரும் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளனர்.