

வியட்நாம் கடல் எல்லை பகுதிக் குள் அத்துமீறி நுழைந்த சீன சரக்கு கப்பலை அந்த நாட்டு கடலோர காவல் படை நேற்று பறிமுதல் செய்தது.
அண்மைக்காலமாக தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்நிலையில் ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் ஏற்றி வந்த சீன சரக்கு கப்பல் தென்சீனக் கடலில் வியட்நாம் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அந்த கப்பலை வியட்நாம் கடலோர காவல் படையினர் நேற்று சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர்.
அந்த கப்பலில் இருந்த 3 மாலுமி கள் வியட்நாம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து வியட்நாம் அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.