பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம்: போர் நினைவிடத்தில் பிரணாப் அஞ்சலி

பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம்: போர் நினைவிடத்தில் பிரணாப் அஞ்சலி
Updated on
2 min read

பப்புவா நியூ கினியாவில் இரண்டாம் உலகப் போர் நடந்த போது பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினை விடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப் பெரிய தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு அரசு முறை பயணமாக இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நேற்று முன் தினம் பிரணாப் தரையிறங்கியதும், பப்புவா நியூ கினியாவின் ஆளுநர் ஜெனரலான (அதிபர்) சர் மைக்கேல் ஒஹியோவை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போர் நினைவிடத்துக்கு சென்று இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

10 கோடி டாலர் கடன் உதவி

இதைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பப்புவா நியூ கினியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், எரி சக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வும் 100 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா கடனாக வழங்க அறிவித்தது. மேலும் இரு தரப்புக்கும் இடையே பசிபிக் நாடுகளின் பரந்த எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களை இணைந்து மேம்படுத்துவது குறித்த உடன்பாடும் கையெழுத்தானது.

பின்னர் இரு நாட்டுத் தலைவர் களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘எரிசக்தி பாதுகாப் பில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்ற பசிபிக் நியூ கினியா எண்ணெய் வளத்தை இணைந்து மேம்படுத்தும் கூட்டுறவு ஒப்பந்தத் துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் பதவியில் தமிழர்

பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு மாகாணத்துக்கு சிவகாசியில் இருந்து வேலை தேடிச் சென்ற தமிழரான சசிந்திரன் முத்துவேல் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சிங்கப்பூரில் பணியாற்றியபோது, ஒரு செய்தித்தாளில் இடம்பெற்ற விளம் பரத்தை பார்த்து பப்புவா நியூ கினியாவுக்கு வந்தேன். நான் மேலாளராக பணியாற்றிய சில்லறை மளிகை கடை திடீரென மூடப்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த போது, சொந்தமாக கடை வைக்க முடிவு செய்தேன். அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தேன். தேர்த லிலும் போட்டியிட்டேன். இதனால் 2009ல் மேற்கு நியூ பிரிட்டனின் மாகாண ஆளுநராக உயர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிந்திரன் முத்துவேல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in