காலநிலை மாற்றம், கரோனா, மோதல்களால் உலகம் மோசமாக உள்ளது: ஐ.நா. கவலை

காலநிலை மாற்றம், கரோனா, மோதல்களால் உலகம் மோசமாக உள்ளது: ஐ.நா. கவலை
Updated on
1 min read

ஐக்கிய நாடுகள்: "காலநிலை மாற்றம், மோதல்கள், கரோனா ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளது" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, “கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்கள் தூண்டிவிடப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட உலகம் பல வழிகளில் தற்போது மோசமாக உள்ளது.

உலகளவில் நிலவும் மோதல்களை குறைக்க என்னால் சமாதான முயற்சியை செய்ய முடியும். என்னால் மத்தியஸ்தம் செய்ய முடியும், ஆனால் எனக்கு அந்த அதிகாரம் இல்லை. மோதல்களை விரைவில் நிறுத்தக்கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்று நம்புகிறேன். இதற்கான முயற்சிகளில் நான் கவனம் செலுத்துகிறேன்.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனது நம்பிக்கை சரியானது என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு முடிவு கட்டுவதும் அவசியம்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் வேலை மற்றும் கல்விக்கான உரிமைகளில் தலிபான்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானின் பல்வேறு மக்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் என ஐ.நா அழுத்தம் கொடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in