

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது முதலாக, அந்நாட்டில் பழங்கால இஸ்லாமிய சட்டத்தை (ஷரியா)நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஆண்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும். பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது; திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் இசைக் கருவிகள் இசைக்கப்படக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.
இந்நிலையில், பக்டியா மாகாணத்தில் நேற்று இசைக்கலைஞர் ஒருவரின் இசைக்கருவியை பறித்த தலிபான்கள், அதனைபொதுமக்கள் முன்னிலையில் சாலையில் போட்டுஎரித்தனர். அப்போது, தனது இசைக்கருவிஎரிவதைபார்த்து அழுத இசைக்கலைஞரை தலிபான்கள் பரிகாசம் செய்தனர். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.