Published : 10 Apr 2016 01:01 PM
Last Updated : 10 Apr 2016 01:01 PM

அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

பிரிட்டனின் மிக உயரிய ‘பவுண்ட்டர்ஸ்’ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவழி தொழிலதிபர் பால் சாகு கடந்த 2010-ம் ஆண்டில் ஆசியன் விருதை தோற்றுவித்தார். பொதுசேவை, வணிகம், கேளிக்கை, கலை, விளையாட்டு என 14 பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆசியன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

6-வது ஆசியன் விருது வழங்கும் விழா லண்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அன்னை தெரசாவுக்கு பவுண்ட்டர்ஸ் என்ற விருது அறிவிக்கப்பட்டது. தெரசாவின் உறவினர் அஜி போஜாஜியு விருதினைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தொழில் குழுமத் தலைவர் விருது பிரகாஷ் லோகியா, சிறந்த கலைஞர் விருது உஸ்மான், சிறந்த விளையாட்டு வீரர் விருது சோன் ஹாங்-மின், திரைப்படைத் துறை சாதனையாளர் விருது ஆசிப் கபாடியா, சிறந்த டி.வி. நடிகர் விருது குணால் நய்யார் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x