

இலங்கையில் தமிழர்கள் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால்தான் பெரும்பான்மை சிங்கள பவுத்த இனம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் எரவூரில் பொதுமக்களிடம் உரையாற்றிய சிறிசேனா, நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும் வகையில் தமிழர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை பெரும்பான்மை சமூகம் உறுதி செய்ய வெண்டும்.
வடக்கு மாகாணத்தினர் (தமிழர்கள்) ஆயுதம் எடுத்ததற்குக் காரணம் அவர்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதே. எனவே மீண்டும் எந்த ஒரு இனமும் ஆயுதத்தை எடுக்க நாம் அனுமதிக்க முடியாது.
என்று கூறினார் சிறிசேனா.