30 கோடி பேரால் பின்தொடரப்பட்டு இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஜென்னர்

30 கோடி பேரால் பின்தொடரப்பட்டு இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஜென்னர்
Updated on
1 min read

பேஸ்புக், ட்விட்டரைப் போலமக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இளைஞர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் இன்ஸ்டாகிராமை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலரை கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியான கைலி ஜென்னரை 30 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் முதல் பெண் என்ற சாதனையை கைலி ஜென்னர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு பாப் பாடகி ஏரியானா கிரான்ட் என்பவரையே இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். இப்போது அந்த சாதனையை கைலி ஜென்னர் முறியடித்துள்ளார்.

உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் ஆண் நபராக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். அவரை 38 கோடி பேர் பின்தொடர்கின்றனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in