

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ராணுவ பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை யில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறை யாக வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை உலகம் முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்தது. இதையடுத்து அந்நாட் டின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது.
எனினும் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரிக்கும் பணியில் இருந்து பின்வாங்க மறுத்து வருகிறது. சமீபத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து அதி நவீன ஏவுகணை சோத னையை வட கொரியா நடத்தி முடித்தது. இந்த சோதனை முடிந்த 2 நாட்களுக்கு பின் மீண்டும் ஒரு நடுத்தர ரக ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாரானதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. முசூடன் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவு கணை ஆசியாவில் உள்ள அமெ ரிக்க ராணுவ நிலைகளை குறி வைத்து, சுமார் 3,500 கி.மீ தொலை வில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப் பதாக கூறப்படுகிறது.
5-வது முறையாக சோதனை
இந்நிலையில் 5-வது முறையாக மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மே மாத தொடக்கத்தில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் தேர்தலை நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளது. அதற்கு முன் தன்னை ஒரு சக்தி வாய்ந்த தலைவராக நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் இந்த புதிய அணு ஆயுத சோதனைக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசிய தென்கொரிய அதிபர் பார்க், ‘விரைவில் 5-வது அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது. அதற்கான அறிகுறி தென்பட தொடங்கி யுள்ளன. ஒருவேளை சோதனை நடத்தும் பட்சத்தில் அந்நாட்டின் மீது கூடுதலாக வலுவான தடைகளை விதிக்க சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்’ என்றார்.