

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரண மாக சீனாவுடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கில்கிட்டையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் குஞ்செராப் கணவாய் வழியாக இணைக்கும் காராகோரம் நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சேதமடைந்துள்ளது.
அஸ்டூர், கிஸெர் பகுதியை இணைக்கும் சாலையும் முடங்கி யுள்ளது. இதனால், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் இதுவரை கனமழைக்கு 70 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர். 48 மணி நேரமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
கோஹிஸ்தான் பகுதியில் ஏற் பட்ட நிலச்சரிவில் 20-க்கும் மேற் பட்டோர் கற்குவியல்களுக்குள் சிக்கியுள்ளனர். உடைந்த பாலங் கள், சாலைகளைச் சீரமைக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
கோஹிஸ்தான், டியாமெர், நாகர், ஹன்ஸா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ள னர். அவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிலர் உயிரைப் பணயம் வைத்து, சேறு, பெரும் பாறைகளைக் கடந்து அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெண் களும், குழந்தைகளும் சிக்கிக் கொண்டிருந்தாலும் உடனடியாக மீட்பு பணி நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கில்கிட்-பல்டிஸ்தான் அமைச்சர் முகமது இக்பால், “சிக்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் உள்ளிட்டோரை மீட்க ஹெலிகாப்டர் உதவி அளிக்கும்படி ராணுவத்திடம் கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கோஹிஸ்தான், டியாமெர், நாகர், ஹன்ஸா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.