

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக பெரும்பான்மை ரஷ்யர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் தேர்தல் வரும் 2018-ம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டு மக்களிடம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 73 சதவீத ரஷ்ய மக்கள் புதின் மீண்டும் அதிபராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.உக்ரைன், சிரியா விவகாரங்களில் புதினின் துணிச்சலான நடவடிக்கை களுக்கு ரஷ்ய மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.