

கேரள மீனவர்கள் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி மாலுமியை விடுவிக்க இந்தியாவுக்கு உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹாக் என்ற பகுதியில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் அமைந் துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் நெதர்லாந் துக்கான இத்தாலிய தூதர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘இந்தியாவில் கைதான மாலுமி சால்வதோர் கிரோன் உடனடியாக தாய்நாடு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும்.
தனது நாடு மற்றும் குடும் பத்தை விட்டு பல ஆயிரம் மைல் தொலைவில் அவர் சிறைப்பட் டுள்ளார். இதனால் தந்தையை காணாமல் அவரது இரு குழந்தைகளும் ஏக்கத்தில் தவித்து வருகின்றனர். எனவே அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.