'தடுப்பூசி செலுத்தாதவர்களை..': பிரான்ஸ் அதிபரின் தரம் தாழ்ந்த பேச்சால் சர்ச்சை

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
Updated on
1 min read

பாரிஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஆத்திரம் கொண்டு தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார்.

ஒமைக்ரான் தொற்று ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. பிரான்ஸ் நாட்டில் அன்றாடம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த அதிபர் இமானுவேல் மேக்ரான், "தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது. அதுதான் இனி அரசின் கொள்கை" என்று கூறினார்.

அவரது தரக்குறைவான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. வலதுசாரி தலைவரான மரைன் லே பென், ஒரு அதிபராக இருப்பவர் இவ்வாறாக தரம் தாழ்ந்து பேசக் கூடாது என ட்வீட் செய்துள்ளார்.

பிரான்ஸில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் ஒருவேளை அவர் போட்டியிட்டால் இதுபோன்ற பேச்சுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in