இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி: அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை அறிவிப்பு

இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி: அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை அறிவிப்பு
Updated on
1 min read

இணையதளத்தில் செல்வாக்கு அதிகம் உள்ள உலக பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 30 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே சமூக வலைதளங்களை பாஜக அதிகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிக மாக பயன்படுத்தி வருகிறார். அரசு திட்டங்கள், முக்கிய பிரச் சினைகள், நாட்டு நடப்புகள், வெளி நாடுகளுடனான தூதரக உறவு போன்ற எல்லா தகவல்களையும் தினமும் அவற்றில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் பிரபலங்களின் சமூக வலை தளங்களை பின் தொடர்வோர் எண்ணிக்கை உட்பட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இணையதளத்தில் செல்வாக்கு மிகுந்த 30 பேரின் பட்டியலை அமெரிக்க பத்திரிகை யான ‘டைம்’ கடந்த ஆண்டு வெளி யிட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி ‘இன்டர்நெட் ஸ்டார்’ ஆக இருக்கிறார் என்று டைம் குறிப்பிட்டுள்ளது.

மோடியை ட்விட்டரில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். முகநூலில் 3 கோடியே 20 லட்சம் ‘லைக்’ வாங்கி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு திடீரென பாகிஸ்தான் பயணம் மேற் கொண்டது பற்றி ட்விட்டரில் மோடி வெளியிட்ட தகவலையும் டைம் இதழ் எடுத்துக் காட்டி உள்ளது.

மேலும், இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், தொலைக்காட்சி நடிகையும் பிரபல மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன், இவரது கணவர் கய்னே வெஸ்ட், ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங் உட்பட 30 பிரபலங்கள் அடங்கி உள்ளனர்.

கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லில்லி சிங்கும் 30 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in