

மாயமான மலேசிய விமானம் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.29 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு கடந்த 3 மாதங்களாக தேடியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
விமானம் மாயமான சம்பவத்தில் மலேசிய அரசு உண்மைகளை மறைப்பதாக பயணிகளின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்கள் ஓர் கூட்டமைப்பை உருவாக்கி மாயமான விமானம் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ. 29 கோடியே 52 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். இந்நிலையில் மலேசிய விமானத்தை தேடும் பரப்பளவு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.