Last Updated : 14 Mar, 2016 10:28 AM

 

Published : 14 Mar 2016 10:28 AM
Last Updated : 14 Mar 2016 10:28 AM

பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட சீக்கிய அமைச்சர்கள் கனடாவில் அதிகம்: பிரதமர் ஜஸ்டின் பெருமிதம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், உங்கள் அரசில் சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

பிரதமர் ஜஸ்டின் தலைமை யிலான அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜித் சாஜன் உட்பட 4 சீக்கிய அமைச் சர்கள் உள்ளனர். கனடா நாடாளு மன்றத்தில் மொத்தம் 17 சீக்கிய எம்.பி.க்கள் உள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் சீக்கிய குருத் வாராவுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அவர் கனடாவாழ் இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x