

மாயமான மலேசிய விமானம் தானாகப் பறக்கும் ஆட்டோபைலட் முறையில் பறந்துள்ளது என்று ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய இந்திய பெருங்கடலில் விழுந்தி ருக்கலாம் என்று கருதப்ப டுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 330 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தேடுதல் பணி நடை பெற்றது. இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. தற்போது செயற்கைக்கோள் தகவல்களை மீண்டும் ஆராய்ந்து புதிய இடத்தில் தேடுதல் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ் கூறியதாவது: தானாகப் பறக்கும் ஆட்டோபைலட் முறையில் எரிபொருள் தீரும் வரை மலேசிய விமானம் பறந்துள்ளது. செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். விமானம் எப்போது ஆட்டோபைலட்டுக்கு மாற்றப்பட் டது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து மேற்கு திசையில் 1800 கி.மீட்டர் தொலைவில் சுமார் 23,000 சதுர மைல் பரப்பிலான புதிய இடத்தில் தேடுதல் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அங்கு ஆகஸ்டில் தொடங்கும் தேடுதல் பணி ஓராண்டுக்கு நீடிக்கும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.
விமானத்தை தேடும் பணியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு கள் ஈடுபட்டுள்ளன. தேடுதல் பணிக்கு ஆஸ்திரேலியா தலைமை ஏற்றுள்ளது. எத்தனை ஆண்டுகளா னாலும் விமானத்தை தேடும் பணியைக் கை விடமாட் டோம் என்று 3 நாடுகளும் அறிவித்துள்ளன.