

கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது சரண் அடைந்த 8 ஆயிரம் பேர் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவர்களில் 200 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுமன்னிப்பில் தங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 23-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சிறைத்துறை அமைச்சர்
சுவாமிநாதன் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து தமிழ் கைதிகள் தங்கள் உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினம் வாபஸ் பெற்றனர்.