

அணுஆயுத தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்குமாறு வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை அண்மையில் கடுமையான பொரு ளாதாரத் தடைகளை விதித்தது.
இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா நேற்றுமுன்தினம் தென்கொரியாவுக்கு அருகே 6 ஏவுகணைகளை கடலில் வீசியது. இது தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் ஜிம் ஜோங்-உன் உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவ னமான கேசிஎன்.ஏ. வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:
வடகொரியாவின் இறை யாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ வலிமையை கண்டு வடகொரியா அஞ்சாது.
மக்களின் பாதுகாப்பு, எதிரி நாடுகளுடன் ராணுவ சமநிலை யைப் பேணவே அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறோம். எத்தகைய அச்சு றுத்தல்களையும் சமாளிக்கும் வகையில் அணுஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் கூறியதாவது: வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகி றோம். சர்வதேச சமூகத்தின் கருத் துக்கு அந்த நாடு மதிப்பளிக்க வேண்டும். தேவையற்ற பதற் றத்தை உருவாக்குவது அந்த நாட்டுக்கே ஆபத்தாக முடியும் என்று தெரிவித்துள்ளன.