கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு

கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு
Updated on
1 min read

ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர்.

சிரியா, இராக், ஆப்கானிஸ் தானில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரை யேறும் அவர்கள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப் பிய நாடுகள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றன.

கடந்த 2015 நவம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 130 பேரை கொலை செய்தனர். அந்த தீவி ரவாதிகள் அகதிகள் போர்வை யில் பாரீஸுக்குள் ஊடுருவி இருப்பது பின்னர் தெரியவந்தது.

மேலும் ஜெர்மனியின் கோலான் நகரில் அண்மையில் நடைபெற்ற உள்ளூர் திருவிழா வின்போது அகதி இளைஞர் களால் சுமார் 500 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்சினைகளால் அகதி களுக்கு எதிரான மனப்போக்கு ஐரோப்பிய மக்களிடம் உருவாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை முழுமையாக மூடியுள்ளன.

பொதுவாக கிரீஸ் தீவுகளில் கரையேறும் அகதிகள் அங்கி ருந்து மாசிடோனியா வழியாக ஆஸ்திரியா, ஜெர்மனிக்கு செல்வது வழக்கம். ஆனால் மாசிடோனியா அரசு தனது எல்லைகளை சீல் வைத்து மூடிவிட்டது. இதனால் சுமார் 30 ஆயிரம் அகதிகள் கிரீஸின் எல்லையோர கிராமமான இடோமனில் பரிதவித்து வருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in