பிரஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி; 55 பேர் காயம்

பிரஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி; 55 பேர் காயம்
Updated on
2 min read

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத் திலும் மெட்ரோ ரயில் நிலையத் திலும் நேற்று அடுத்தடுத்து நிகழ்த் தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்கு தலில் 34 பேர் உடல் சிதறி பலியா னார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இது தற்கொலைப்படை தீவிர வாதிகளின் சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப் படுகிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக, விமானங்கள் புறப் படும் பகுதியில் வெடி சத்தம் கேட்டதாகவும், அரபி மொழியில் ஒருவர் கோஷம் எழுப்பியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள் ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதில் சுமார் 130 பேர் பலியாயினர். இதில் தொடர்புடைய தாகக் கருதப்படும் சலே அப்தெஸ் லாம் பிரஸல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப் பட்டார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரஸல்ஸ் நகரில் உள்ள ஜவென்டம் விமான நிலையத்தின் பிரதான அரங்கில் நேற்று காலை யில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

விமான நிலையத்தில் குண்டு வெடித்த அடுத்த சில நிமிடங் களில் மால்பீக் மெட்ரோ ரயில் நிலை யத்தில் ஒரு குண்டு வெடித்தது. இங்குதான் ஐரோப்பிய யூனியனின் முக்கிய அலுவலக கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இதனிடையே, விமான நிலை யம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பீரே மேஸ் கூறும் போது, “விமான நிலைய குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாயினர். 81 பேர் காயமடைந் தனர். ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாயினர். 55 பேர் காயமடைந்தனர்” என்றார்.

ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

இந்த குண்டு வெடிப்பு காரண மாக நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்தத் தாக்கு தலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

மேலும் லண்டன், பாரீஸ், பிராங்க்பர்ட், ஆம்ஸ்டர்டாம், கோபன்ஹேகன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலை யங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.

இதுகுறித்து பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் கூறும்போது, “இது கண்மூடித்தனமான, கோழைத்தனமான தாக்குதல். இந்த நாள் நாட்டுக்கு கருப்பு தினம். இந்தத் தருணத்தில் அனைவரும் அமைதி காத்து அரசுக்கு ஒத்து ழைப்பு தர வேண்டும்” என்றார்.

உலக தலைவர்கள் கண்டனம்

இந்தத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களுக்கு பாதிப்பில்லை

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “பிரஸல்ஸ் நகரில் உள்ள இந்திய தூதர் மஞ்சீவ் புரியை தொடர்புகொண்டு பேசினேன். குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்” என்றார்.

இந்த விபத்தில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் காயமடைந்ததாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பான இடங் களுக்கு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் உதவியதாக வும் அவர் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “காயமடைந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்யும்” என்றார்.

பிரதமர் மோடி கண்டனம்:

“பிரஸல்ஸ் விமான நிலைய தாக்குதல் செய்தி கவலை அளிப்பதாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஏற்கெனவே திட்டமிட்டபடி, பிரஸல்ஸ் நகரில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in