3 மாதங்களுக்குள் தமிழர்கள் மீள்குடியேற்றம்: இலங்கை அதிபர் உறுதி

3 மாதங்களுக்குள் தமிழர்கள் மீள்குடியேற்றம்: இலங்கை அதிபர் உறுதி
Updated on
1 min read

இடம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணம் பகுதி தமிழர்கள் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் பங்கேற்றார். அப்போது சுமார் 25 ஆண்டுகள் உயர்பாதுகாப்பு வளையத்தில் இருந்த காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சுமார் 700 குடும்பங்களிடம் அவர்களுக்குச் சொந்தமான 701 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்பட்டது. இந்த விழாவில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:

மற்றவர்களுடைய நிலங்களை தமிழ் மக்கள் கேட்கவில்லை. அவர்களின் சொந்த நிலங்களையே கேட்கிறார்கள். அதை திருப்பி அளிக்க வேண்டியது அரசின் கடமை. இன்னும் 3 மாதங் களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்ட மக்க ளின் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவ டையும். போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வீட்டில் நானோ, முதல்வர் விக்னேஸ்வரனோ, அமைச்சர் சுவாமிநாதனோ குடியேற போவதில்லை. எனவே எங்கள் விருப்பப்படி வீட்டை கட்ட மாட்டோம். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்ப வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

தென்இலங்கையைச் சேர்ந்த சிலர் இனவாதத்தைத் தூண்டி வருகின்றனர். அவர்கள் தமிழர் பகுதிக்கு நேரில் வந்து இங்கு வாழும் மக்களின் நிலைமையை பார்க்க வேண்டும்.

அப்போது உண்மை புரியும். சிங்கள இனவாதிகள் தங்களின் கொள்கையைக் கைவிட வேண்டும். தேச நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டை யும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in