

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த அமெரிக்க இளைஞருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் முபித் எல்ஜி (32). இவர் அங்கு பிட்சா உணவகம் நடத்தி வருகிறார். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளரான முபித், அமெரிக்க இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார். மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக கள்ளச்சந்தையில் ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் முயற்சி செய்துள்ளார்.
முபித்தின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர் எப்பிஐ போலீஸில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து முபித்தின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த எப்.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2014 மே மாதம் அவரை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி எலிசபெத் உல்ப்போர்டு விசாரித்து முபித் எல்ஜிக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
முபித்துக்கு 14 வயது இருக்கும்போது அவரது குடும்பத்தினர் ஏமனில் இருந்து நியூயார்க் நகரில் குடியேறினர். ஆனால் அவரது தந்தை மீண்டும் ஏமனுக்கே திரும்பிச் சென்றுவிட்டார். தந்தை துணை யின்றி பொருளாதார நெருக் கடியில் சிக்கித் தவித்த முபித் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.
பல்வேறு இடங்களில் தொழி லாளியாக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் பிட்சா கடையைத் தொடங்கினார். ஆனால் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் கவர்ந் திழுக்கப்பட்ட அவர், அந்த அமைப்பின் உளவாளியாகச் செயல்பட்டார்.
ஐ.எஸ். அமைப்புக்காக அமெரிக்க முஸ்லிம் இளைஞர் களிடம் ஆதரவு திரட்டி 2 பேரை ஐ.எஸ். அமைப்பில் சேர்த்துள்ளார். இறுதியில் எப்.பி.ஐ. போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார்.
அமெரிக்காவில் ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவர் கைது செய் யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.