Last Updated : 22 Mar, 2016 10:05 AM

 

Published : 22 Mar 2016 10:05 AM
Last Updated : 22 Mar 2016 10:05 AM

யுனெஸ்கோ உயிர்க்கோள காப்பக பட்டியலில் இந்தியாவின் அகஸ்திய மலை இணைப்பு

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அகஸ்திய மலை, யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் இரண்டு நாள் மாநாடு பெரு தலைநகர் லிமாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில், யுனெஸ்கோ பட்டியலில் 120 நாடுகளில் உள்ள உயிர்க்கோள காப்பகங்களின் எண்ணிக்கை 669 ஆக உயர்த்தப்பட்டது. இவற்றில் 16 இடங்கள், ஒரு நாட்டுக்குள்ளேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையிலோ அரசியல் எல்லை கடந்த பரப்புடையவை.

புதிதாக சேர்க்கப்பட்டவற்றில், 18 தேசிய நினைவிடங்களும், ஸ்பெயின்-போர்ச்சுக்கல் இருநாடுகளிலும் பரவியுள்ள ஓரிடமும் அடக்கம்.

இந்தியாவின் அகஸ்திய மலை இப்பட்டியலில் சேர்கக்ப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அகஸ்திய மலை அமைந்துள்ளது. பெரும்பாலும் வெப்ப மண்டலக் காட்டுப்பகுதியான இங்கு 2,254 வகையான தாவரங்கள், சுமார் 400 ஓரிட வாழ்விகள் உள்ளன.

அகஸ்திய மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், செந்துருனி, பெப்பாரா, நெய்யாறு ஆகிய சரணாலயங்கள் உள்ளன.

2,000-க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள், நூற்றுக்கணக்கான அரிய தாவர வகைகள், சிங்கவால் குரங்கு, காந்தக் கீரி, நீலகிரி வரையாடு, 273 பறவையினங்கள், 200 வகையான ஊர்வனங்கள் இம்மலையில் உள்ளன. மேலும், கடல்மட்டத்திலிருந்து 1,868 மீட்டர் உயரமுள்ள சிகரமும் உள்ளது. தமிழகம் மற்றும் கேரளம் என இரு மாநிலங்களிலும் பரவியுள்ள அகஸ்திய மலை, உயிர்க்கோள காப்பகமாக 2001-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இங்குள்ள செட்டில்மென்ட் பகுதியில் 3,000 பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் இயற்கை வளத்தை நம்பியே இருந்தனர். பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்கள் வனவளத்தை பெருமளவு சார்ந்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன. இழற்றில், நீலகிரி, நந்தா தேவி, நோக்ரெக், மன்னார் வளைகுடா, சுந்தரவனக் காடுகள், கிரேட் நிகோபார் உள்ளிட்ட 9 உயிர்க்கோளங்கள் மட்டுமே யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உயிர்க்கோள காப்பகங்களில் தாவரங் கள், விலங்குகள் மட்டுமின்றி இங்கு வாழும் மனித,சமுதாயத்துக்கும் பாது காப்பு அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x