

அமெரிக்காவில் உள்ள இடாஹோ மாநிலத்தின் பாய்சி நகரத்தில் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12ம் தேதி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பாய்சி நகரத்தில் தமிழ் சங்கம் கோலாகலமாக துவங்கப்பட்டுள்ளது. சங்கத்திற்கான முத்திரையையும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு இடங்களிலிருந்து வந்து பல தமிழ்க் குடும்பங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக துவங்கப்பட்டுள்ள இந்த தமிழ் சங்கம், அங்குள்ள தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.