Published : 01 Dec 2021 07:29 PM
Last Updated : 01 Dec 2021 07:29 PM

பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்

வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் பாரிஸும், சிங்கப்பூரும் மாறி மாறி முதலிடத்தில் இருக்கும்.

ஆனால் முதன்முறையாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதுவரை 6வது இடத்தில் இருந்த டெல் அவிவ் ஐந்து இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்துள்ளது.

எகானாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யூனிட் (Economist Intelligence Unit EIU) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வாழ்வதற்கு அதிக செலவாகும் நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அமெரிக்க டாலரின் அடிப்படையில் எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது. 173 நகரங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. இதில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் முதலிடத்தைப் பெற்றது.

இரண்டாவது இடத்தை பாரிஸும், 3வது இடத்தை சிங்கப்பூரும், 4, 5 வது இடங்களை ஜூரிச் மற்றும் ஹாங்காங் நகரங்களும் முறையே பிடித்துள்ளன.

டாப் 10ல் கோப்பன்ஹேகன் 8வது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 9வது இடத்திலும், ஜப்பானின் ஒசாகா 10வது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x