Published : 30 Nov 2021 09:08 AM
Last Updated : 30 Nov 2021 09:08 AM

ட்விட்டர் புதிய சிஇஓவின் வயது 37: உலகின் டாப் 500 நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளில் மிகவும் இளமையானவர்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலுக்கு 37 வயதுதான் ஆகிறது. இதனால், உலகளவில் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களிலேயே மிகவும் இளைமையானவர் என்ற அந்தஸ்தைப் பராக் அகர்வால் பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இருந்த பராக் அகர்வால் ட்விட்டரின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பராக் அகர்வால் 1984ல் பிறந்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ட்விட்டர் நிறுவனம் பராக் அகர்வாலின் பிறந்த தேதியை வெளியிட மறுத்துள்ளது. ஆனால் அவர் 1984ல் பிறந்தார் என்று மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1984 மே 14 ஆம் தேதி, மெட்டா இன்க் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் பிறந்தார். இப்போது, பராக் அகர்வாலும் 1984ல் பிறந்துள்ளதால். உலகின் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களில் பராக் அகர்வாலும், மார்க் ஜூக்கர்பர்கும் மிகவும் இளமையானவர்கள். வால் மார்ட் சிஇஓ வாரன் பஃப்பட் தான் வயது அதிகமான சிஇஓ என அறியப்படுகிறார். அவருக்கு வயது 91.

யார் இந்த பராக் அகர்வால்?

இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால், மும்பை ஐஐடியில் பயின்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். கடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பொறுப்பேற்றார். இப்போது 2021 நவம்பரில் பராக் அகர்வால், ட்விட்டரின் சிஇஓவாக பதவி ஏற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x