பிரஸல்ஸ் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அணு மின் நிலையத்தை குறிவைத்த ஐ.எஸ்.

பிரஸல்ஸ் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அணு மின் நிலையத்தை குறிவைத்த ஐ.எஸ்.
Updated on
2 min read

பெல்ஜியம் நாட்டில் உள்ள அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருந்ததாகவும் ஆனால் அங்கு பாதுகாப்பு பலமாக இருந்ததால் தங்கள் இலக்கை மாற்றிக் கொண்டதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி யதில் 31 பேர் பலியாயினர். 300 பேர் காயமடைந்தனர்.

சகோதரர்களான காலித், இப்ராஹிம் எல்-பக்ராவ் மற்றும் ஐஎஸ் இயக்கத்தின் வெடிகுண்டு நிபுணர் நஜிம் லாச்ராவி ஆகிய மூவரும் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடன் வந்த மற்றொரு நபர் வெடிகுண்டுகள் அடங்கிய சூட்கேஸை விட்டுவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரஸல்ஸ் நகரிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள திஹேஞ் அணு மின் நிலை யத்தின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அங்கிருந்து அணுகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை திருடவோ திட்ட மிட்டுள்ளனர்.

இதற்காக அணு மின் நிலைய தலைவரின் வீட்டில் கண்காணிப்பு கேமரா வைத்து அவரது நடவடிக் கையை படம் பிடித்துள்ளனர். அவரை கடத்தி வைத்துக்கொண்டு அணு மின் நிலையத்துக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அணு மின் நிலையத் தின் எரிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்வதற்காக, அதில் பணிபுரியும் 11 ஊழியர்கள் அனுமதி பெற்றுள் ளனர். இந்நிலையில், அணு மின் நிலைய ஊழியர்களின் உதவியுடன் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகக் கருதி அந்த 11 பேருக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அணு மின் நிலையத்தில் பாது காப்பு கெடுபிடிகள் கடுமையாக இருந்ததே இதற்குக் காரணம். இதற்கிடையே, பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி சலே அப்தெஸ்லாமை போலீஸார் கைது செய்தனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்த விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிக மக்கள் வசிக்கும் பகுதி யில் அணு மின் நிலையம் அமைந் திருப்பதால் அதன் மீது தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

6 பேர் கைது

இதனிடையே பிரஸ்ல்ஸ் நகரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்து விசாரித்து வருவ தாக உயர் அதிகாரிகள் தெரிவித் தனர்.

மேலும் பாரீஸ் தாக்குதல் தொடர் பாக பிரஸல்ஸ் நகரில் கைதான அப்தெஸ்லாம் நீதிமன்றத்தில் கூறும்போது, “விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி எனக்குத் தெரியாது. பாரீஸ் தாக்கு தல் தொடர்பாக விளக்கம் அளிக்க ஏதுவாக என்னை உடனடியாக பாரீஸுக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in