Published : 29 Nov 2021 10:00 PM
Last Updated : 29 Nov 2021 10:00 PM

ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்ஸி ராஜினாமா செய்தார்: இந்தியருக்கு வாய்ப்பு கிடைத்தது

ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக தொழில்நுட்ப தலைவராக இருந்த பரக் அகர்வால் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரக் அகர்வால் மும்பை ஐஐடியில் பயின்றவர். பின்னர் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

ட்விட்டர் நிறுவனமே இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜேக் டார்ஸியும் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விஷயம் யாருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. நான் ட்விட்டரில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

— jack⚡️ (@jack) November 29, 2021

2020 ஆம் ஆண்டு எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜேக் டார்ஸியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தது. டார்ஸி ட்விட்டர் நிறுவனத்தின் மீது சரிவர கவனம் செலுத்தவில்லை மாறாக அவர் தான் நடத்தும் ஸ்கொயர் இன்க் நிறுவனத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x