

அரசு ஊழியர்களுக்கு கோவிட் போனஸாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வை அடுத்த 2 ஆண்டுகள் வரை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
கரோனாவின் பாதிப்பு காரணமாக ஈடுகட்ட முடியாத அளவுக்கு மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம். இப்பிரச்சினை உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சம்பளத்துடன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் தொகையை கூடுதலாக வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில் மாநில அளவிலான ஊழியர்கள் மற்றும் ஜெர்மனி அரசின் ஊழியர்கள் சுமார் 3.5 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஜெர்மனியில் கோவிட் போனஸ் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் வரி இல்லாத ஊதிய உயர்வாக 2.8% வரி1,300 யூரோக்கள் (அதாவது டாலரில் $1,470, இந்திய பணத்தில் ரூ.1,10,338.71) தொகையை ஒவ்வொரு அரசு ஊழியரும் பெறுவார்.
ஜெர்மனியின் அனைத்து மாநிலங்களுக்கும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இது செல்லுபடியாகும்.
அரசு பொது மருத்துவமனைகள், பள்ளிகள், காவல்துறை, தீயணைப்பு சேவைகளில் பணிபுரியாற்றுவோர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அனைவருக்கும் இது பொருந்தும்.
சில மருத்துவ மற்றும் பராமரிப்புத் தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் பயிற்சி பெறும் நிலையில் உள்ளவர்களுக்கு 650 யூரோக்கள் ($735) வரியில்லா போனஸாக வழங்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.