

பாகிஸ்தானின் ஷாப்குவாதர் பகுதி நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெஷாவர் அருகேயுள்ள ஷாப்குவாதர் பகுதியில் உள்ளூர் நீதிமன்றம் செயல்படுகிறது. அங்கு நேற்று காலை சாதாரண நபர் போன்று தற்கொலைப் படை தீவிர வாதி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றான். அங்கு பாது காப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தியபோது தீவிரவாதி வெடித்துச் சிதறினான்.இதில் 2 போலீஸார் உட்பட 17 பேர் உயிரிழந் தனர். 30-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்து மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலிபான் அமைப் பில் இருந்து பிரிந்த ஜமாதுல் ஆரார் என்ற அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.