Published : 12 Mar 2016 10:34 AM
Last Updated : 12 Mar 2016 10:34 AM

பாகிஸ்தானுக்கு எப்.16 விமானங்கள் விற்க தடையில்லை

பாகிஸ்தானுக்கு எப்.16 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்க செனட் சபை ஆதரவு அளித்துள்ளது.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எப்.16 ரகத்தைச் சேர்ந்த 8 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். இதற்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த கட்சியைச் சேர்ந்த ராந்த் பால் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

செனட் சபையின் மொத்த உறுப் பினர்கள் 100 பேர். இதில் 71 பேர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித் தனர். ராந்த் பாலின் தீர்மானத்துக்கு 24 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர்.

எனவே பாகிஸ்தானுக்கு எப்.16 ரக போர் விமானங்களை விற்க இனி மேல் எவ்வித தடையும் இல்லை என்று அந்த நாட்டு அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x