2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் டிசம்பர் 1 முதல் ஆஸ்திரேலியாவுக்குத் தடையின்றி வரலாம்: பிரதமர் மோரிஸன் அறிவிப்பு

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் | கோப்புப் படம்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி 2 டோஸ் முழுமையாகச் செலுத்தியவர்கள், முறையான விசா வைத்திருந்தால், விலக்கு கேட்டு விண்ணப்பிக்காமல் ஆஸ்திரேலியாவுக்குள் டிசம்பர் 1-ம் தேதி முதல் தடையின்றி வரலாம் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள், மாணவர்கள், மனிதநேயத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், விடுமுறைக்கு வருபவர்கள், குடும்ப விசா வைத்திருப்பவர்கள் தகுதியான விசா வை்திருந்தால் தடையின்றி வரலாம்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''2021, டிசம்பர் 1-ம் தேதி முதல், முழுமையாக இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம். விலக்கு கோரி தனியாக விண்ணிப்பிக்கத் தேவையில்லை.

தகுதியான விசா வைத்திருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், விடுமுறைக்கு வரும் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் அனைவரும் தகுதியான விசா வைத்திருத்தல் போதுமானது.

ஆஸ்திரேலிய மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையில் கோவிட் நெகட்டிவ் சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும்.

தொழிலாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோர் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கு உதவி செய்யக்கூடியவர்கள், எங்கள் கல்வித்துறைக்கு ஆதரவு வழங்கக்கூடியவர்கள்''.

இவ்வாறு ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்குள் வருவோர் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி முழுமையாகச் செலுத்தியிருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in